/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ திருப்பரங்குன்றத்தில் எண்ணற்ற குகைகள் | Thiruparankundram full of caves
திருப்பரங்குன்றத்தில் எண்ணற்ற குகைகள் | Thiruparankundram full of caves
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் தென் பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சமண குடை வரைகள் நிறைந்து காணப்படுகிறது. இக்குகைப் பகுதியில் மயில்கள், மந்திகள் அதிகளவில் உலா வருகின்றன. இக்குடைவரை கிமு முதல் நூற்றாண்டில் திகம்பர சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது. கிபி ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் வளர்ந்த நிலையில் சமணம் தளர்ச்சியடைந்து சைவம் மற்றும் வைணவ சமயங்கள் வளர்ச்சியடைந்தன. மதுரை மாவட்டம் புளியங்குடி, அரிட்டாபட்டி, மேலுார் பஞ்சபாண்டவர் மலை, யானைமலை உள்ளிட்ட பகுதிகளில் சமணர் படுக்கைகள் மற்றும் குகைகள் நிறைந்து காணப்படுகிறது.
அக் 20, 2024