இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு | Flood Madurai
மதுரையில் பெய்த கன மழையால் செல்லுார், மீனாம்பாள்புரம், பிபி குளம், நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் கழிவு நீருடன் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மதுரை புறநகரில் கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீர் சேர்ந்து நகரில் அதிகளவு வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது.
அக் 26, 2024