/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ 12.20 லட்சம் ஊழியர்களின் ஓட்டு யாருக்கு | Railway Union Recognition election | SRMU | DREU | SRES
12.20 லட்சம் ஊழியர்களின் ஓட்டு யாருக்கு | Railway Union Recognition election | SRMU | DREU | SRES
இந்திய ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரம் பெறுவதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. தொழிலாளர்களின் ஆதரவை திரட்ட ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்திய ரயில்வேயில் அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். முதல் முறையாக 2007ல் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்தது. அதன்பின் 2013ம் ஆண்டில் தொழிற்சங்க தேர்தல் நடந்தது. கோவிட் தொற்று பரவலால் 2019க்கு பின் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. பல்வேறு முயற்சிகளுக்கு பின் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தொழிற்சங்கங்கள் ஆதரவு திரட்ட ஆரம்பித்து விட்டன.
நவ 16, 2024