மேல்நிலைத் தொட்டியில் ஏறி போராட்டம் | Airport expansion work | Minister Murthy's talks failed
மதுரை ஏர்போர்ட் விரிவாக்கப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக ஏர்போர்ட் சுற்றியுள்ள கிராம மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இடம் கொடுத்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மாநகராட்சி எல்கைக்குள் தங்களுக்கு 3 சென்ட் இடம் மற்றும் வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களிடம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால், நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை கண்டித்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்ன உடைப்பு கிராம மக்கள் வீடுகளை காலி செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.