மதுரை டூ மலேசியா சென்னை வழியாக விமான சேவை துவக்கம் | Madurai | Madurai to Malaysia flight service
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் மதுரை டூ சென்னை, சென்னை டூ மதுரைக்கு இரவு நேர விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் முதல்முறையாக மதுரையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவை டிசம்பர் 21 ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் துவக்க உள்ளது. மதுரையிலிருந்து இரவு 9:05 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் மலேசிய நேரப்படி காலை 8:30 மணிக்கு பினாங்கு செல்கிறது. மறு மார்க்கத்தில் மலேசிய நேரப்படி காலை 9:30 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு மதுரை வந்தடையும். டில்லி, கோல்கட்டாவில் இருந்து வரும் விமானங்களுடன் பினாங்கு விமானம் இணைக்கப்படுவதால் மற்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் சென்னை, மதுரைக்கு இணைப்பு விமானமாக இந்த பினாங்கு விமானத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.