/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மீனாட்சியம்மன் தேரினை வடம் பிடித்து இழுத்த பெண் பக்தர்கள் | Madurai | Meenakshi Sundareswarar Temple
மீனாட்சியம்மன் தேரினை வடம் பிடித்து இழுத்த பெண் பக்தர்கள் | Madurai | Meenakshi Sundareswarar Temple
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மார்கழியில் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் லீலையை குறிக்கும் வகையில் அஷ்டமி சப்பர விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்மனுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனி சப்பரத்திலும் எழுந்தருளினர். கயிலாய வாத்தியங்கள் முழங்க கீழமாசி வீதியில் இருந்து புறப்பாடாகி, யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி, மேலவெளி வீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வீதி உலா வந்து சப்பரம் கோயிலை அடைந்தது.
டிச 23, 2024