வேலுார் இப்ராஹிம் கைது | Madurai | Vellore Ibrahim arrested
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்ஹாவில் அசைவ உணவு சாப்பிட்டதாக ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தர்ஹா வழிபாடு நடத்த பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இருந்து புறப்பட்டார். அவரை போலீசார் தடுத்தனர். இதனால் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து நவாஸ்கனி எம்பி படத்தை இப்ராஹிம் செருப்பால் அடித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்கக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜன 25, 2025