உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மத்திய தொகுதி மாநகராட்சி சமுதாயக் கூடத்தைக் கைப்பற்றிய திமுக |NTK madurai central constituency

மத்திய தொகுதி மாநகராட்சி சமுதாயக் கூடத்தைக் கைப்பற்றிய திமுக |NTK madurai central constituency

மதுரை மத்திய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வடக்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பு நாடார் சந்தில் மாநகாரட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடம் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருள் வைத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை மத்திய வேட்பாளர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியினர் அப்பகுதியில் குவிந்து சமூதாய நலக் கூடத்தை திறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வந்த பின்னரும் கூட சீலை அகற்றி கதவு திறக்கப்படவில்லை. போராட்டம் வலுவடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் சீலை அகற்றினர். சீல் வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட டி ஷர்ட் துணை முதல்வர் உதயநிதி படத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. #NTK #Madurai #Tamilnadu #Politics #Election2026 #DMK #PTR #Seizures

மார் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ