காரைக்குடி நாதக சோகம் | Karaikudi | NTK Party Administrator Suicide
காரைக்குடி நாதக சோகம் | Karaikudi | NTK Party Administrator Suicide சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யா நகரை சேர்ந்த இன்ஜினீயர் பிரபாகரன் வயது 31. இவர் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவருக்கு மனைவி. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் தனது வீட்டில் பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். காரைக்குடி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சீமான் தோல்வி காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது. பிரபாகரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.