மாசிப்பச்சை மகாசிவராத்திரி வழிபாடு | Ochandamman sivarathiri function | usilampatti | madurai
மாசிப்பச்சை மகாசிவராத்திரி வழிபாடு / Ochandamman sivarathiri function / usilampatti / madurai மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி திருவிழா குலதெய்வ வழிபாடாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருமாத்தூர் மூணுசாமி கோயில்கள், வாலாந்தூர் அங்காளஈஸ்வரி, திடியன் சோணை முத்தையா, ஆரியபட்டி கல்யாண கருப்பசாமி, நாட்டாமங்கலம், கொக்குளம் ஆதிசிவன் உள்ளிட்ட கோயில்களுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக வெளியூர் சென்ற மக்கள் திரண்டு வருகின்றனர். இதில் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வழிபாட்டுக்கு ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். இதற்காக உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி வழிபாட்டுக்காக அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய மாசி பெட்டிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிழார்பட்டி, கீரிபட்டி வழியாக மாலை இளம்தோப்பு சென்று அங்கு அம்மனின் ஆபரணங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுப்படும். தொடர்ந்து இன்று மாலை பாப்பாபட்டி கோயிலுக்கு சென்று இரவு வழிபாடுகள் ஆதி வழக்கப்படி பக்தர்கள் பச்சை கொண்டு வந்து வழிபாடு நடைபெறும். நாளை திருவிழா முடிந்த பின் பிப்ரவரி 28 ம் தேதி மாலை மீண்டும் பெட்டிகள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வரப்படும். வரும் வழியில் வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து அய்யன், மாயாண்டி சுவாமிகள் ஆணிச்செருப்பில் நடந்து கோயிலுக்கு வருவார்கள். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள்.