யார் அவர்? எங்கே இருக்கிறார்? இது எப்படி சாத்தியம்? நீண்ட கேள்விக்கு விடை
யார் அவர்? எங்கே இருக்கிறார்? இது எப்படி சாத்தியம்? நீண்ட கேள்விக்கு விடை / 56 year old woman who has been cycling for 40 years / K.Pudhur / Madurai உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பண விரையம் மிச்சம் என பன்முகத் தன்மை கொண்ட உலகின் ஒரே வாகனம் சைக்கிள் தான் என்றால் அது மிகையாகாது. சிறு வயது முதல் இதுநாள் வரை தொடர்ந்து 40 ஆண்டுக்கும் மேலாக தினமும் குறைந்தபட்சம் 20 கிலோ மீட்டர் துாரம் சைக்கிள் ஓட்டி வருகிறார் 56 வயது மீனாட்சி அம்மாள். இதன் பயனாய் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் பிறருக்கு எடுத்துக் காட்டாய் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வருகிறார் மீனாட்சி அம்மாள். மதுரை கோ புதூர் மண்மலை மேடு கருப்பசாமி கோயவிலில் பூசாரி ஆக பணிபுரிந்து வரும் இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். கோயிலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தனது சைக்கிளில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வாங்குகிறாா். காய்கறி மூட்டைகள், பலசரக்குகள் என தான் எங்கு சென்றாலும் தனது சைக்கிளிலேயே செல்லும் மீனாட்சி அம்மாள், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக காண்போர் அனைவரையும் வியக்க வைக்கிறார். சிறு வயதில் நினைவு தெரிந்த நாள் முதல் தற்போது வரை எங்கு சென்றாலும் சைக்கிளில் செல்வதையே வழக்கமாக வைத்துள்ளார். இதனால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் அனைத்து பாகங்களும் இயங்கக்கூடிய ஒரு பயிற்சியாக இந்த சைக்கிளிங் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார். இவரைப்போன்று அனைவரும் சைக்கிள் ஓட்டுவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது உடல் உழைப்பு என்பது மிகக் குறைந்து விட்டது. மீனாட்சி அம்மாள் போல் சைக்கிளிங் பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சைக்களில் ஓட்டும் மீனாட்சி அம்மாள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் 20 கிலோ மீட்டர் துாரம் சைக்கிள் ஓட்டுவதை கட்டாயமாகப் பின்பற்றி வருகிறார். இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தினமும் 20 கிலோ மீட்டர் துாரம் என இதுவரை சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் துாரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.