உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அழைத்தும், இழுத்தும் வரப்பட்ட கூட்டம் | Paid Visitors busy

அழைத்தும், இழுத்தும் வரப்பட்ட கூட்டம் | Paid Visitors busy

தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை வைத்து அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு மற்றும் வெற்றியின் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்ட காலம் மலையேறி விட்டது. இப்போது 40 சதவீத மக்கள் கட்சியினரின் கூட்டங்களுக்கு வந்தாலே பெரிய விஷயமாகி விட்டது. மீதமுள்ள 60 சதவீத வெற்றிடத்தில் அனைத்து கட்சிகளுமே பெய்டு பார்வையாளர்கள் எனும் கட்டண பார்வையாளர்களை கொண்டு தான் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிரதமர் மோடியின் ரோடு ேஷா என்றாலும், முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் என்றாலும், பழனிச்சாமி பொதுக்கூட்டம் என்றாலும் இந்த பெய்டு பார்வையாளர்களை அழைத்தால் தான் பிரம்மாண்டத்தைக் காட்ட முடியும். நிகழ்ச்சிகளும் களைகட்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் நகர் முதல் கிராமங்கள் வரை ஏராளமான ஆண், பெண் ஏஜென்ட்கள் உள்ளனர். கட்சியினர் இவர்களிடம் கூட்டம் அல்லது பிரச்சாரம் நடக்கும் நாள், நேரம் குறித்த தகவல் தெரிவித்து விட்டால் போதும். உடனே வேன், ஆட்டோ, ட்ராக்டர் என கிடைக்கும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்து பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அனுப்பி விடுவர். அதற்காக பெண்களுக்கு தலா 200 ஆண்களுக்கு தலா 300 கட்சியின் சார்பில் ஏஜென்ட் வழியாக வழங்கப்படும். இதுதான் தமிழக அரசியல் களத்தில் கூட்டம் சேர்ப்பதற்கான எழுதப்படாத வழிமுறையாக உள்ளது. இதுகுறித்து கட்சி கூட்டங்களுக்கு ஆட்களை சப்ளை செய்யும் ஏஜென்ட் ஒருவர் கூறுகையில், நகர் பகுதியில் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர். கிராமங்களில் காட்டு வேலை மற்றும் 100 நாள் வேலை பயனாளிகள் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி என்றால் முதல் ஆளாக வந்துவிடுவார்கள். தற்போது நடுத்தர குடும்பங்களில் வேலைக்கு செல்லாத வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக ஆர்வத்துடன் பார்வையாளர்களாக வர படையெடுக்கின்றனர். அதிமுக, திமுக என பெரிய கட்சிகள் என்றால் அவர்களுக்கு தான் நீ, நான் என போட்டி இருக்கும். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளில் அவ்வளவாக கவனிப்பிருக்காது. பொதுவாக கட்சி கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு மறுநாள் அந்தந்த கிராமங்களிலேயே ஏதாவது ஒருவர் வீட்டு விழா என கூறி பொதுவான இடத்தில் கிடாய் வெட்டி அசைவ விருந்து வைத்து அசத்தி விடுவர். இதுபோன்ற பெய்டு பார்வைகளுக்கான செலவினங்களை தேர்தல் அதிகாரி சேகரிப்பதும் கடினம் என்பதால் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். இன்னும் சில நாட்களுக்கு எங்களுக்கு கிராக்கி தான் என்றார். குறிப்பு: செய்தி துவங்கும் முன்பு முடிந்த பின்பு பணம் பட்டுவாடா செய்யும் விசுவல் தலா 15 செக்கன்ட்ஸ்

ஏப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை