ஜனவரி 25ம் தேதி தேரோட்டம் | Palani Thaipusam
பழநி தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத்திருவிழா வெகுவிமரிசையாக துவங்கியது. பெரியநாயகி அம்மன் கோயில் கொடிகட்டி மண்டபம் கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஜனவரி 24ம் தேதி மாலை நடக்கிறது. அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டம் மற்றும் ஜனவரி 25ம் தேதி தைப்பூசத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடக்கிறது. விழாவையொட்டி இன்று முதல் தினமும் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதரராக தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருள்வர்.
ஜன 19, 2024