உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 3வது முறை போட்டியிடும் அமைச்சர் தியாகராஜனுக்கே எங்கள் ஆதரவு

3வது முறை போட்டியிடும் அமைச்சர் தியாகராஜனுக்கே எங்கள் ஆதரவு

3வது முறை போட்டியிடும் அமைச்சர் தியாகராஜனுக்கே எங்கள் ஆதரவு | Madurai | Minister Thiagarajan success is sure அமைச்சர் தியாகராஜன் மதுரையின் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த 2016 முதன்முறையாக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு 64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2021ல் 2வது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு 73,205 வாக்குகள் பெற்று 49.47 சதவீத வாக்கு விகிதத்தில் அபார வெற்றி வாகை சூடினார். தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சராக என பொறுப்புகள் வகித்தவர். மதுரை மத்திய தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்கவும், அதை உடனுக்குடன் தீர்க்கவும் தனியாக ஒரு இணையதளத்தையும், மொபைல் செயலியையும் உருவாக்கி, அதன் மூலம் ஆயிரக்கணக்கான புகார்களுக்குத் தீர்வு கண்டுள்ளார். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல், ரோடு வசதி, குடிநீர் வசதி மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். பெருந்தொற்று காலத்தில் மதுரை மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தனது சொந்த முயற்சியிலும், அரசு ரீதியாகவும் வழங்கி பெயர் பெற்றவர். மத்திய தொகுதியான ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், கோமஸ்பாளையம், ஞானஒளிவுபுரம் பொதுமக்கள் மீண்டும் எங்கள் ஆதரவு அமைச்சர் தியாகராஜனுக்கே என தெரிவித்தனர். 58 வது வட்ட கவுன்சிலர் ஜெயராமன் மத்திய தொகுதியில் அமைச்சர் தியாகராஜன் வெற்றி பெறுவது உறுதி, அவர் வெற்றி பெற்ற பின் செய்யவிருக்கும் மக்கள் சேவை குறித்தும் தெரிவித்தார். மதுரை மத்திய தொகுதியை ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றியமைத்த அமைச்சரின் இந்தப் பணிகள், மக்களிடையே ஒரு பலமான நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. எங்கள் தொகுதிக்கு இவரைப் போன்ற ஒரு செயல்திறன் மிக்க ஆளுமைதான் எப்போதும் தேவை என மக்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ