உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மார்ச் 19ம் தேதி கிரிவல வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்| Panguni festival kodiyetram| Tiruparankundram

மார்ச் 19ம் தேதி கிரிவல வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்| Panguni festival kodiyetram| Tiruparankundram

மார்ச் 19ம் தேதி கிரிவல வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்/ Panguni festival kodiyetram/ Tiruparankundram திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவர் தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. சுவாமி தெய்வானையுடன் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்கமுலாம் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றினர். 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். மார்ச் 16ம் தேதி சூரசம்கார லீலை, மார்ச் 17ம் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், மார்ச் 18ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 19ம் தேதி கிரிவலம் வீதிகளில் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு செய்தனர். கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை