உறவினர்களான இருவரது பெற்றோர்களுக்கு இடையே நீண்ட கால பகை
உறவினர்களான இருவரது பெற்றோர்களுக்கு இடையே நீண்ட கால பகை / Usilampatti / Parents attack married couple மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மானுத்தை சேர்ந்தவர்கள் அய்யர்சாமி வயது 22, கவினா ஸ்ரீ வயது 21. உறவினர்களான இருவரது பெற்றோர்களுக்கு இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு உள்ளது. பெற்றோர்களுக்கு இடையே உள்ள தகராறையும் தாண்டி இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேசினர். காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் குடும்பத்தினர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இரவு 9 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காரில் ஏறி வெளியேறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் காதல் ஜோடியை மீட்டு, இருவரது பெற்றோர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.