உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கடவுள் வேடமிட்டவர்கள் கலெக்டரிடம் மனு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கடவுள் வேடமிட்டவர்கள் கலெக்டரிடம் மனு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கடவுள் வேடமிட்டவர்கள் கலெக்டரிடம் மனு | People dressed as Gods petition to the collector | Madurai திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை. தீபம் ஏற்ற வலியுறுத்தி கடந்த வாரம் மனு நீதி நாளில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மனு அளித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் உயர் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்று அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் ஆபீஸில் இன்று நடைபெற்ற மனு நீதி நாளில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பு சார்பில் முருகன், வள்ளி, ராமன் , அனுமர், பெருமாள் வேடமிட்டவர்கள் மனு அளிக்க வருகை தந்தனர். அவர்களை கலெட்கடர் ஆபிஸுக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அனுமதிக்கும்படி கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கடவுள் வேடமிட்டவர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறினார்.

டிச 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ