வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆமாம் வாஸ்தவம் தான் தண்ணீர் வரவில்லை வரும்..ஆனா வராது
கொடைக்கானல் நகராட்சி வேஸ்ட்? | CM Stalin staying in Kodaikanal | No Basic Fecility | People Protest
கொடைக்கானல் நகராட்சி வேஸ்ட்? | CM Stalin staying in Kodaikanal | No Basic Fecility | People Protest கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே டோபிகானா பகுதி உள்ளது. நகராட்சியின் 13வது வார்டிற்கு உட்பட்ட இந்த வார்டில் கடந்த 20 நாளாக குடிநீர் சப்ளை இல்லை. இதுகுறித்து நகராட்சியிடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. நகராட்சி டாய்லெட்டில் தண்ணீர் இல்லாததால் கடு்ம துர்நாற்றம் எடுக்கிறது. தொற்று நோய் பாதிப்புக்கு பலர் உள்ளாகினர். கொடைக்கானலில் ஓய்வெடுத்து வரும் முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடிநீர் மற்றும் டாய்லெட்டில் தண்ணீர் வசதி கேட்டு பிரதான சாலையில் குடியிருப்போர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்பாட்டுக்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவே சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
ஆமாம் வாஸ்தவம் தான் தண்ணீர் வரவில்லை வரும்..ஆனா வராது