குறைந்த செலவில் ஹஜ் யாத்திரை எனக்கூறி கும்பல் ₹பல கோடி மோசடி
குறைந்த செலவில் ஹஜ் யாத்திரை எனக்கூறி கும்பல் ₹பல கோடி மோசடி |Madurai | Hajj Tour |Forgery | Police Complaint | madurai மதுரை அண்ணாநகர் செண்பகத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சபீலா பாத்திமா. இவர் குடும்பத்துடன் ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டார். இதற்காக கரூர் பள்ளபட்டியைச் சேர்ந்த மர்ஜான் என்பவர் மூலம் அகமது மீரான், ஜூனத் நிஷா ஆகியோர் சபீலா பாத்திமாவிற்கு அறிமுகமாகினர். அகமது மீரான், ஜூனத் நிஷா ஆகியோர் கரூர் பள்ளபட்டியில் மஹதி ஹஜ் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். ஹஜ் பயணம் செல்ல நபருக்கு 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மஹதி ஹஜ் சர்வீஸ் நிறுவனம் மூலம் ஹஜ் செல்ல 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவாகும் எனக்கூறி சபீலா பாத்திமாவை நம்ப வைத்தார். இவர்களது பேச்சை நம்பிய சபீலா பாத்திமா ஹஜ் பயணம் செல்ல கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினர் 12 பேருக்கு 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்தார். விசா தொடர்பான விவரங்களை சரிபார்த்த போது விசா ரத்து செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட போது அகமது மீரான், ஜூனத் நிஷா சரியான பதில் அளிக்கவில்லை. போலீசில் புகார் அளித்ததால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து சபீலா பாத்திமா மதுரை போலீஸ் கமிஷனிடம் புகார் கூறினார். தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்டோரிடம் ஹஜ் மோசடி கும்பல் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.