படித்துறைகளில் பூணுால் அணிந்து வழிபாடு | Poonul Wearing Ceremony | Madurai
ஆண்டு தோறும் வரும் ஆவணி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி பூணூல் அணியும் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆவணி அவிட்டத்தையொட்டி மதுரையில் பல்வேறு பகுதிகளில் பூணூல் அணியும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை ஒத்தக்கடை பகுதியில் பூணுால் அணியும் விழா ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரம் மற்றும் பாலபிேஷகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஹோமம் முன் அமர்ந்து விஸ்வ கர்மா காயத்ரி மந்திரம் ஓத பூணூல் அணியும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணுால் அணிந்து கொண்டனர். அதே போல் மதுரை பேச்சியம்மன் படித்துறை, எஸ்எஸ். காலணி உள்ளிட்ட பகுதிகளில் பூணூல் அணியும் விழா கோலாகலமாக நடைப்பெற்றது.