உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஹிந்து முன்னனி நிர்வாகிகள் கைது

ஹிந்து முன்னனி நிர்வாகிகள் கைது

ஹிந்து முன்னனி நிர்வாகிகள் கைது Singampunari | Religious conversion |Hindu Munnani functionaries arrested சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேதுராமலிங்கம் ஆயில் மில்லில் இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆயில் மில் உரிமையாளர் சுதா அவரது கணவர் இருவரும் பாதிரியார்களை அழைத்து வந்து ஜபக் கூட்டம் நடத்தினர். மில்லில் வேலை பார்க்கும் ஹிந்து, முஸ்லீம்களுக்கு உணவு மற்றும் அரிசி பணம் வழங்கி, துண்டு பிரசுரங்கள் வழங்கி மதபிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. ஸ்பாட்டுக்கு விரைந்த பாஜக, ஹிந்து முன்னனி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஜபக்கூட்டம் நடத்தியவர்களிடம் கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து ஹிந்து முன்னனி சார்பில் சிங்கம்புணரி போலீஸில் புகார் தெரிவித்தனர். சேதுராமலிங்கம் ஆயில் மில் உரிமையாளர் சுதா கொடுத்த புகாரின் பேரில் பாஜ, இந்து முன்னனி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளான செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், சந்தோஷ் குமார், கிருஷ்ணகுமார், தங்கப்பாண்டி, முருக செல்வம் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். ஹிந்து முன்னனி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஹிந்து முன்னனி நிர்வாகிகள் குவிந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

டிச 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை