உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு | Road Safety | Marathon| KRS CBSE | Madurai

மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு | Road Safety | Marathon| KRS CBSE | Madurai

மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு | Road Safety | Marathon| KRS CBSE | Madurai இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்து எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களை விட சாலை விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என ஷாக் ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இந்தியாவில் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வரம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மதுரை அருப்புக்கோட்டை ரோடு டி.வி.ஆர்., நகரில் அமைந்துள்ள கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் CBSE பள்ளி சார்பாக ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் பகுதியாக இந்தாண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது சாலை பாதுகாப்பு விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும்? அதை பின்பற்றுவதால் என்ன நன்மை என மாணவர்கள் பதாகை ஏந்தி ஓடினர். அது மட்டும் அல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறினால் நேரும் துன்பங்கள் குறித்து மாணவர்கள் எடுத்துரைத்தனர். மதுரை பெருங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு மாரத்தான் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று பெருங்குடி மெயின் ரோட்டை அடைந்தது. நிகழ்ச்சியில் KRS CBSE பள்ளியில் படிக்கும் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். உற்சாகத்துடன் மாரத்தான் ஓடி மக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜன 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை