திராவிட மாடல் ஆட்சி சா(வே)தனை! | Road without removing electric pols
பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுரை மாவட்டம் அ.புதுப்பட்டியில் இருந்து அழகாபுரி வழியாக கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான ரோடு விரிவாக்கம் செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறை ஜெட் வேகத்தில் மேற்கொள்கிறது. இதற்காக ரோட்டோரம் இருபுறமும் இருந்த பழமையான ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றி பெரும் தொகையை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பார்த்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. அழகாபுரியில் மட்டும் விபத்து அபாயத்தில் உள்ள 20 மின் கம்பங்களை மாற்று இடத்தில் வைக்காமல் மின் கம்பத்தை சுற்றிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெரியாறு பாசன கால்வாய் பாலத்தை ஒட்டிய வளைவில் சிறு கிணற்றுக்காக ஆபத்தான முறையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. மற்றொரு இடத்தில் ரோட்டோரம் அபாய கிணறு உள்ளது. சாலையோரம் அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு ஐந்தாண்டு்கள் நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க வேண்டும்., தரமற்ற ரோட்டை பெயர்த்து எடுத்து விட்டு சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர் செலவில் புதிய தரமான ரோடு அமைக்க வேண்டும். தாமத்தித்தால் சுற்று வட்டார கிராம மக்கள் சார்பாக பலகட்ட போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.