8 படிகளில் அனுபவம் நிறைந்த போலீசார்கள் நியமனம் | Sabarimala | Mandal Pooja
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 16 ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. பம்பையில் பக்தர்கள் மழை மற்றும். சிரமப்படாமல் இருக்க 7 கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பம்பை ராமமூர்த்தி மண்டபத்தில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய பந்தல் கட்டப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வெறும் பக்தர்களுக்காக பம்பை மணல் பரப்பில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நிலக்கல் அல்லாமல் பம்பை ஹில் டாப் மற்றும் சக்குப்பாலத்தில் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டுள்ளது. 18 படிகளில் இந்த சீசனில் அனுபவம் நிறைந்த போலீசார் மட்டுமே பக்தர்களுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ளனர். 18 படிகளுக்கு மேலே நகரும் மேற்கூரை பணியும் முடிந்துள்ளது. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை நேரத்தில் படும் சிரமங்களை தடுப்பதற்காக வடக்கு பகுதியில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் டின் அரவணை தற்போது இருப்பில் உள்ளது. சபரிமலை சன்னிதானத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உட்பட 1250 பேரும் பம்பையில் 750 பேரும் நிலக்கலில் 620 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களிடம் மரியாதையுடன் பழக வேண்டும், தேவையான உதவிகளை செய்ய வேண்டும், மொபைலில் படம் எடுக்கக்கூடாது போன்ற அறிவுரைகள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.