சபரிமலை ஐயப்பன், மேல்சாந்தியை தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்திய மானாமதுரை ஓவியர்
சபரிமலை ஐயப்பன், மேல்சாந்தியை தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்திய மானாமதுரை ஓவியர் | Sabarimala painting | Manamadurai painter is amazing சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவை சேர்ந்தவர் ஓவியர் கார்த்தி. இவர் சிறுவயதிலேயே ஓவியக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டு ஓவியம் வரைவதில் வல்லமை பெற்றவராக உள்ளார். பழங்கள், இலைகள், மயிலிறகு உள்ளிட்ட மென்மையான பொருட்களில் சுவாமி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை தத்ரூபமாக ஓவியம் வரைந்து அவர்களுக்கு பரிசளித்து வருகிறார். மேலும் இவர் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக ஓவியக் கலையையும் கற்றுத் தருகிறார். இவர் ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்த முறை சபரிமலை சென்ற கார்த்தி ஐயப்ப சுவாமியை தத்ரூபமாக வரைந்தார். அதை பார்த்து பக்தர்கள் பலர் தங்களையும் ஓவியமாக வரைந்து தரும்படி கேட்டனர். அவர்களை அமர வைத்து ஓவியம் வரைந்து கொடுத்தார். சபரிமலை சன்னிதானத்தில் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அறைக்கு கார்த்தியை அழைத்து சென்றார். மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி எதிரே அமர்ந்து சில நிமிடங்களிலேயே அவரது உருவத்தை தத்ரூபமாக வரைந்து கொடுத்து கார்த்தி அசத்தினார். இதனை ஆச்சர்யத்துடன் பார்த்த மேல்சாந்தி ஓவியரை பாராட்டி சால்வை அணிவித்து பிரசாதம்