துாய்மை பணியாளர்களுக்கு கருப்பு பொங்கல் | Sanitation workers are not salary | TN
தமிழகம் முழுவதிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் கள்ளர் துவக்கப்பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் துாய்மைப் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு மாத சம்பளம் 1000 ரூபாய். தினமும் 3 மணி நேரம் பள்ளிகளில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கஷ்டப்படும் துாய்மைப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் என்பது எட்டாக்கனியாக உள்ளது. கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை 5 மாத சம்பளம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து 2024 ம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 3 மாத சம்பளம் தலா 3000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பின் 2025 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 4 மாத சம்பளம் வழங்கவில்லை. பொங்கலையொட்டி பணம் இல்லாமல் துாய்மைப் பணியாளர்கள் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர். துாய்மைப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் வெறும் 1000 ரூபாய் கூட வழங்க முடியாமல் அரசின் கஜானா காலியாகி விட்டதா அல்லது அரசு நிதி திவாலாகி விட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்லோருக்குமான அரசு தான் விடியல் அரசு என மூச்சுக்கு 300 முறை அளந்து விடும் திமுக அரசு அப்பாவி துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தையாவது தரவில்லை. இதனால் வெறுத்துப்போன துாய்மை பணியாளர்கள் இந்தாண்டு பொங்கலை கருப்பு பொங்கலாக கருதி வீட்டில் முடங்கினர். பொங்கல் முடிந்த நிலையில் நான்கு மாத சம்பளம் தலா 4000 மற்றும் பொங்கல் போனஸ் என கூடுதல் தொகையை வழங்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இனி வரும் காலங்களில் விலைவாசிக்கு ஏற்ப மாத சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.