உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடி | Security and surveillance arrangements for Dewali | Madurai

மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடி | Security and surveillance arrangements for Dewali | Madurai

மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடி / Security and surveillance arrangements for Dewali / Madurai தீபாவளியை நெருங்கிய நிலையில் மதுரையின் முக்கிய பஜார் வீதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்து தூண், கீழவாசல், பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் தீபாவளி ஜவுளி விற்பனை களைகட்ட தொடங்கியது. பொதுமக்கள் வருகையை முன்னிட்டு மதுரை சிட்டி போலீஸ் சார்பில் விளக்குத்தூண் பகுதியில் காவல் உதவி மையத்தை போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார். பஜார் பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலமாக பொதுமக்களின் நடமாட்டம் முழுவதுமாக கண்காணிக்கும் பணி்யை பார்வையிட்டார். பின்னர் வாட்ச் டவர் அமைப்பது மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வாகனங்களையும் முறையான இடங்களில் நிறுத்த வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் திருடர்கள், வழிப்பறி கொள்ளையர், FIR குற்றவாளிகள் நடமாட்டம் குறித்தும் பிரத்தியேக ஆப் மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை