உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முஸ்லிம்கள் தேங்காய், பழத்தட்டுடன் பங்கேற்பு | Selva Vinayagar Muthumariamman Temple | Manamadurai

முஸ்லிம்கள் தேங்காய், பழத்தட்டுடன் பங்கேற்பு | Selva Vinayagar Muthumariamman Temple | Manamadurai

முஸ்லிம்கள் தேங்காய், பழத்தட்டுடன் பங்கேற்பு / Selva Vinayagar Muthumariamman Temple / Manamadurai / Sivagangai சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து கும்பாபிேஷக விழா கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, சப்த கன்னிகா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர். முன்னதாக சாலைக்கிராமம் மஸ்ஜிதே இலாகி பள்ளிவாசலை சேர்ந்தவர்களும், ஜமாத் நிர்வாகிகளும் கோயிலுக்கு வருகை தந்தனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கும்பாபிஷேகத்திற்கு தேவையான தேங்காய், பழங்கள் மற்றும் பொருட்களை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் கொடுத்து சால்வை அணிவித்து கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முஸ்லிம்கள் கோயில் முன்பாக பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர். இந்து கோயிலுக்கு வருகை தந்து பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பாபிஷேக விழாவில் சாலைக்கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ