உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சி| Senior Kabbadi tournament| Madurai

இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சி| Senior Kabbadi tournament| Madurai

இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சி| Senior Kabbadi tournament| Madurai மதுரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் கபடி வீரர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது இந்திய ராணுவத்தில் உள்ள ரெட் ஆர்மி கபடி அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் பாண்டியன் தலைமையிலான ராணுவ வீரர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பிப்ரவரி 24ம் தேதி குஜராத்தில் 72வது தேசிய அளவிலான சீனியர் கபடி போட்டி நடக்க உள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க தமிழக முழுவதும் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கல்லூரி வளாகத்தில் பிரத்தியேக பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மூலம் வீரர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி துவங்கிய பயிற்சி வரும் பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெறும். தேசிய போட்டியில் முதலிடம் வெல்லும் முனைப்போடு வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை