அரிவாள் வெட்டு, கத்தி குத்து சம்பவங்களால் அச்சத்தில் மக்கள் | Manamadurai | Series of attacks
அரிவாள் வெட்டு, கத்தி குத்து சம்பவங்களால் அச்சத்தில் மக்கள் | Manamadurai | Series of attacks சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 4 நாட்களாக அரிவாள் வெட்டு, கத்தி குத்து, கொலை என தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி இடைக்காட்டூர் பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 3 பேரை ஒரு கும்பல் அரிவாளால் ஓட, ஓட விரட்டி வெட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மானாமதுரை சீயோன் நகரில் பேசிக்கொண்டிருந்த ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரையும் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன், குணா ஆகியோர் அரிவாளால் ஓட ஓட வெட்டினர். போலீசார் 2 பேரையும் கைது செய்த போது பட்டியல் இனத்தைச் ஆகாஷ் டெலிசன் தப்ப முயன்ற முயன்ற போது காலில் அடிபட்டு மதுரை அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தார். நேற்று இரவு அவர் இறந்தார். அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசார் அடித்ததால்தான் பலியானார் என குற்றஞ்சாட்டினர். போலீசாரை கண்டித்து மானாமதுரை அருகே மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒருவர் கழுத்தை அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்த போது மானாமதுரை, உடைகுளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்தில் சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரையில் கடந்த 4 நாட்களாக அரிவாள் வெட்டு, கத்தி குத்து, மற்றும் கொலை சம்பவங்கள் தினம் தோறும் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.