உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கழிவு நீர் | Sewage canal blocked in Madurai

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கழிவு நீர் | Sewage canal blocked in Madurai

மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிந்து செல்வதற்காக கிருதுமால் கால்வாய், பனகல் ரோடு கால்வாய், அவனியாபுரம் கால்வாய், சிந்தாமணி கால்வாய், அனுப்பானடி கால்வாய் உள்ளிட்ட 13 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் மாநகராட்சி எல்லைக்குள் 44.23 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றன. இதுதவிர 80 க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் உள்ளன. இதில் கிருதுமால் நதி, சிந்தாமணி மழைநீர் கால்வாய்கள் முக்கியமானது. கிருதுமால் நதி துவரிமான் பகுதியில் தொடங்கி 25 கிலோ மீட்டர் வரை சென்று மதுரையின் முக்கிய நீர் பாசன கால்வாயாக முன்பு பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு பாசன நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறயதால் மழைநீர் கால்வாயாக சுருங்கியது. மாநகரப் பகுதியில் மழை பெய்தால் இந்த கால்வாய் வழியாக புறநகர் நீர்நிலைகளுக்கு சென்று விடும். அதன் பிறகு இந்த கால்வாயும் பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி தற்போது கழிவு நீர் கால்வாயாகவும், குடியிருப்பு வாசிகள் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டும் குப்பை தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. அதுபோல் சிந்தாமணி கால்வாயும் நகரின் பெரும் நீர் கடத்தும் வழித் தடமாக இருந்தது. தற்போது இந்த கால்வாயும் முழு ஆக்கிரமிப்பும், தூர்வாரப்படாமல் நீர் கடத்தும் தன்மையையும் இழந்து விட்டது. அதுபோல் நகரின் பிற மழைநீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. மழை நீர் கால்வாய் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பணிக்காக கடந்த பத்து ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. எனினும் மழை நீர் கால்வாய் வழியாக சொட்டு நீர் கூட சென்றதாக தெரியவில்லை. மாநகராட்சிப் பகுதியில் மழை பெய்தாலே மழைநீர் கால்வாய்கள் மற்றும் கிளை வாய்க் கால்களில் தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே குடியிருப்புகளில் புகுந்து நாள் கணக்கில் தேங்கி நிற்கிறது.

ஜூன் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ