ஆடு, கோழி பலியிட்டு சிறப்பு பூஜை | Special pooja for rain | Sri Satha Temple | Valayapatti | Madurai
ஆடு, கோழி பலியிட்டு சிறப்பு பூஜை | Special pooja for rain | Sri Satha Temple | Valayapatti | Madurai மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டி ஊராட்சி, அரசம்பட்டி கிராம மக்கள் சார்பில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ சாத்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டு மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி, ஆடுகள், கோழி, சேவல்களை பலியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டை வலையபட்டி, அரசம்பட்டி, வி.புதூர், சல்லிக்கோடங்கிபட்டி, ராமகவுண்டன்பட்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட் கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தினர். இதையொட்டி ஸ்ரீ சாத்தா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சாத்தா சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ அன்னதான விருந்து பரிமாறப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று ஸ்ரீசாத்தா சுவாமியை மனமுருக வேண்டினர்.