உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மார்ச் 30 ல் காலை 11 மணிக்கு மேல் தேரோட்டம்

மார்ச் 30 ல் காலை 11 மணிக்கு மேல் தேரோட்டம்

மார்ச் 30 ல் காலை 11 மணிக்கு மேல் தேரோட்டம் / Srivilliputhur / Periya Mariamman Temple Pookkuzhi Festival விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா அதிகாலை 4:30 மணிக்கு மேல் மகா கணபதி பூஜை, அனுக்னை பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி பூஜை, காப்பு கட்டுதலுதடன் தொடங்கியது. முன்னதாக காலை 6:30 மணிக்கு மேல் மாரியம்மன் கோயில் தெருவில் இருந்து நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சுற்றி கொடி பட்டம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்து காலை 8:10 மணிக்கு கோயில் அர்ச்சகர் சுந்தர் கொடி பட்டம் ஏற்றினார். கூடியிருந்த பக்தர்கள் குலவையிட்டு அம்மனை வணங்கினர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மார்ச் 29ம் தேதி மதியம் 12: 35 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், மார்ச் 30ம்தேதி காலை 11 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ