த்தவியல் துறை மூலம் போட்ட பிள்ளையார் சுழி | Starting of Department of Hematology
ரத்தம் சார்ந்த நோய்க்கு நிரந்தர தீர்வு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மதுரை ராஜாஜி அரசு தலைமை ஹாஸ்பிட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரத்தவியல் துறை மூலம் ரத்தப் புற்றுநோய் மற்றும் ரத்தம் சம்மந்தமான நோய்களை மருந்துகள் மூலம் சரிசெய்யலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். மருந்துகள் மூலம் குணமடையாமல் போனால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றனர். இந்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது, நோயாளியின், நோயுற்ற அல்லது சேதமடைந்த எலும்பு மஜ்ஜையை நீக்கி, புதிதாக மாற்றுவதாகும். கீமோதெரபி அல்லது கதிர்வீச்சின் அளவுகள் மிக அதிகமாக இருப்பதால், ஒரு நபரின் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்கள் சிகிச்சையால் நிரந்தரமாக சேதமடையும் அல்லது அழிக்கப்படும் போது, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். இந்த சிகிச்சை இரத்தமாற்றம் போன்றது தான். டோனர்கள் மூலம் பெறப்படும் ரத்தத்தில் இருக்கும் ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து நோயாளியின் இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுகின்றன. இது பொதுவாக தலசீமியா, லுக்கிமியா, லிம்போமா, மல்டிபிள் மைலோமா போன்ற இரத்தப் புற்றுநோய்கள் மற்றும் பிற இரத்த அணுக்களை பாதிக்கும் நோய்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்றப்படும். தற்போது வரை சென்னையில் மட்டுமே இந்த எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்கான பிரிவு உள்ளது. அங்கு சுமார் 180 நோயாளிகள் வரை எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையால் பயனடைந்துள்ளனர்.