தங்கப்பதக்கம் + ₹1 லட்சம் பரிசு வென்று மானாமதுரை வீராங்கனை ஜெயஸ்ரீ சாதனை
தங்கப்பதக்கம் + ₹1 லட்சம் பரிசு வென்று மானாமதுரை வீராங்கனை ஜெயஸ்ரீ சாதனை | State Level Silambam competition | Jayasree champion சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர் ராமசாமி - சாரதா தம்பதியின் மகள் ஜெயஸ்ரீ. இவர் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கிறார். மானாமதுரையில் உள்ள வீர விதை சிலம்பம் அகாடமியில் பயிற்சியாளர் பெருமாளிடம் ஜெயஸ்ரீ சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார். இவர் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி கடந்த 5ம் தேதி துவங்கியது. இப்போட்டி வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்கள் பிரிவில் 60 முதல் 70 கிலோ வரையிலான தொடு முறை எடைப்பிரிவில் ஜெயஸ்ரீ பங்கேற்று தங்கப்பதக்கம் மற்றும் ஊக்கத்தொகை 1 லட்சம் ரூபாய் வென்று சாதனை படைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் முதன் முதலாக பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று ஜெயஸ்ரீ சாதனை படைத்து அரசு பள்ளிக்கும், வீரவிதை சிலம்ப அகாடமிக்கும் பெருமை சேர்த்தார். தங்க மங்கை ஜெயஸ்ரீயை பயிற்சியாளர் பெருமாள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மக்கள் பொதுமக்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.