உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திடீர் உண்ணாவிரதம்

மதுரையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திடீர் உண்ணாவிரதம்

மதுரையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திடீர் உண்ணாவிரதம் | prevent the sale of drugs Peoples hunger strike மதுரை ஒத்தக்கடை ஐயப்பன்நகர், சுதந்திராநகர், பாரதிநகர் ஆகிய பகுதிகளில் கடந்த 22 ஆம் தேதி மதுபோதையில் சுற்றித்திரிந்த 6 பேர் கும்பல் சாலையில் சென்ற அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி விட்டு எஸ்கேப் ஆனது. அமைச்சர் மூர்த்தியின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் போதை கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போதை கும்பல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ வெளியானது. கும்பலை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். போதை கும்பல் அட்டகாசம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஒத்தக்கடை மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்தனர். இவ்வழக்கில் சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்ததாக கூறினர். இதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். எனினும் வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கஞ்சா சர்வ சாதாரணமாக கிடைப்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில் மதுரை பாஜ நிர்வாகி சங்கரபாண்டி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க கஞ்சாவுடன் விமான நிலையம் வந்தார். அவரை முதல்வருடன் சந்திக்க விடாமல் போலீசார் தடுத்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த பரபரப்பு அடங்கும் முன் போதை பொருள் புழக்கம் மற்றும் போதை கும்பல் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி ஒத்தக்கடையில் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி