உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தேனியில் ஓட்டம் பிடித்த சப் ரிஜிஸ்டர் - லஞ்ச ஒழிப்பு போலீஸ்

தேனியில் ஓட்டம் பிடித்த சப் ரிஜிஸ்டர் - லஞ்ச ஒழிப்பு போலீஸ்

தேனியில் ஓட்டம் பிடித்த சப் ரிஜிஸ்டர் - லஞ்ச ஒழிப்பு போலீஸ் | Theni | Sub-Registrar Office | Anti-Corruption Raid தேனி மாவட்டம் போடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மதியம் 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்வதற்காக 100க்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தினர். போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன் கதவை பூட்டி பொதுமக்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சோதனை நிறைவடைந்து இரவு 11 மணியளவில் அலுவலக ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ச்சியாக சப் ரிஜிஸ்டரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின் இன்று அதிகாலை 2 மணியளவில் அவசர அவசரமாக போலீசார் வாகனத்தில் ஏறி பறந்தனர். அதே நேரம் சப் ரிஜிஸ்டர் கார்த்திகை ராஜா அலுவலகத்தை பூட்டாமலே பைக்கில் ஏறி சிட்டாகப் பறந்தார். போடி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் தொடர்ந்து 10 மணி நேரம் நடந்த ரெய்டில் லஞ்சப் பணம், ஆவணம் எதுவும் சிக்கவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும், சப் ரிஜிஸ்டரும் வாகனத்தில் ஏறி ஓட்டம் பிடித்தது போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !