மதுரையில் மறியலால் பரபரப்பு | RSS and Tamil Tigers clash | Tallakulam Outpost | Madurai
மதுரையில் மறியலால் பரபரப்பு | RSS and Tamil Tigers clash | Tallakulam Outpost | Madurai அம்பேத்கர் 135வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற போது, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த தமிழ்ப்புலிகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் மாலை அணிவிக்கக் கூடாது என ஆவேசமடைந்த தமிழ்ப்புலிகள் முழக்கங்களை எழுப்பினர். திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளை அங்கிருந்து வெளியேறச் சொல்லி விரட்டினர். இதற்குப் பதிலடியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரும் அங்கேயே நின்று எதிர் கோஷங்களை எழுப்பியதால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடமே போர்க்களமானது. breath: தல்லாகுளம் போலீசார், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அனுப்பி வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த மோதலால் அவுட் போஸ்ட் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.