வாசகர் பட்டாளம் மனம் கவரும் தாமரை பிரதர்ஸ் மீடியா | Thamarai Brothers Media has a unique readership
வாசகர் பட்டாளம் மனம் கவரும் தாமரை பிரதர்ஸ் மீடியா | Thamarai Brothers Media has a unique readership | Madurai மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம், பொது நூலக இயக்ககம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தகத் திருவிழா வெகு விமர்சையாக நடக்கிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் 236 ஸ்டால்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ளன. அனைத்து வயதினருக்குமான புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் கொட்டி கிடக்கின்றது. மதுரையின் பழமை வரலாற்றை பறைசாற்றும் மாமதுரை போற்றுதும், புகைப்பட கண்காட்சி, சிறுவர்களுக்கான வாசிப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டால் எண்கள் 206, 207 ல் 2,499 ரூபாய் செலுத்தி தினமலர் ஆண்டு சந்தாவில் இணைந்தால், ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கான காப்பீடு, 5 லட்சம் ரூபாய் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு ஆகிய பலன்கள் கிடைக்கும். இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு தள்ளுபடி உண்டு. கூடுதல் பலனாக சந்தா செலுத்துபவர்களுக்கு தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த புத்தகங்களை வாசகர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இக்கண்காட்சி நவம்பர் 23ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி, மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே. அப்புறம் வருத்தப்படுவீங்க. ம்ம்ம் குட்டீஸ்களை அழைச்சிட்டு இப்பவே கிளம்புங்க.