உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி போதை ஆசாமிகள் பலியாகும் அவலம் | Tasmac, Private Bar Competion

நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி போதை ஆசாமிகள் பலியாகும் அவலம் | Tasmac, Private Bar Competion

நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி போதை ஆசாமிகள் பலியாகும் அவலம் | Tasmac, Private Bar Competion | Manamadurai சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் ஸ்டாண்ட் அருகே மானாமதுரை டூ மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இதன் கீழே சர்வீஸ் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடையும், தனியார் மதுக்கடையும் அருகருகே உள்ளது. இந்தக் கடைகளை சுற்றி பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன, இந்த மதுபான கடைகளுக்கு பார்கிங் வசதி இல்லை. ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சரக்கு வாங்க பாருக்குள் செல்கின்றனர். மது போதையில் மட்டையாகி ரோட்டிலேயே சிலர் அரை குறை ஆடையுடன் மல்லாக்கப்படுக்கின்றனர். சாலையில் செல்வோரைம் வம்பிழுப்பதையும் குடிமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஃபுல் போதையில் டூவீலர்களில் பறப்போர் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி பலியாகும் அவலமும் தொடர்கிறது. மேலும் யூஸ் அண்ட் த்ரோ டம்ளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை ரோட்டிலேயே வீசிச் செல்கின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பாட்டில்கள் மலை போல் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து குடியிருப்போர் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த மதுபான கடைகள் இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர், மாமூல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு டாஸ்மாக், கலால், வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி, குடியிருப்பு பகுதியில் செயல்படும் மதுக்கடைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். தாமதித்தால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை