காவலாளியை கட்டிப்போட்டு பெட்டி பெட்டியாய் மது கொள்ளை | TASMAC Theft | Ariyalur
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கல்லூர் பாலம் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. காட்டுப்பகுதி என்பதால் ஏற்கனவே ஒரு முறை இங்கு கொள்ளை நடந்தது. இதையடுத்து அப்துல் ரத்தீப் என்பவர் தற்காலிக காவலாளியாக நியமிக்கப்பட்டார். இரவு அவர் பணியில் இருந்தார். அப்போது புகுந்த மர்ம நபர்கள், காவலாளியை தாக்கி கட்டிப்போட்டனர். கடையின் பேட்டை உடைத்து 30 பெட்டி மதுபானங்களை கொள்ளையடித்தனர். கல்லாவில் பணம் இருந்தும் எடுக்க வில்லை. மதுபானம் மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருந்துள்ளது. கொள்ளை போன மதுபானம் மதிப்பு 2 லட்சம் ரூபாய். சிசிடிவி காட்சியை சோதித்த போது மங்கி குல்லா அணிந்த 2 பேர் கைவரிசையில் ஈடுபட்டது தெரிந்தது. கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.