உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தெப்பத்தை நிரப்பும் கழிவு நீரை மாநகராட்சி தடுக்குமா?

தெப்பத்தை நிரப்பும் கழிவு நீரை மாநகராட்சி தடுக்குமா?

தெப்பத்தை நிரப்பும் கழிவு நீரை மாநகராட்சி தடுக்குமா? / Temple administrations drastic decision / Koodal Alagar Temple / Madurai மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. டவுன் ஹால் ரோட்டில் 3 ஏக்கரில் இக்கோயிலின் தெப்பகுளம் அமைந்துள்ளது. கோச்சடையில் இருந்து கிருதுமால் நதி மூலம் தெப்பகுளத்திற்குக் கால்வாய் வழியாக தண்ணீர் வந்தது. 1960ம் ஆண்டு வரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா போல், இந்தக் கோயிலிலுக்கும் தெப்ப உற்சவம் தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடந்து வந்தது. அதன் பிறகு தெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் தெப்ப உற்சவம் தரையில் நடத்தப்பட்டு வருகிறது. 1980-களில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கோயில் நிர்வாகம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டது. அவர்களில் சிலர் தெப்பக்குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் குளத்தைச் சுற்றி எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகள், சர்வீஸ் அண்ட் சேல்ஸ் கடைகள் என 108 கடைகள் செயல்பட்டு வந்தது. தெப்பக்குளம் மற்றும் தெப்பத்தின் படிக்கட்டுகள் கூட ஆக்கிரமிப்பு ஆக்டோபஸ் கரங்களுக்கு முற்றிலும் சென்று விட்டது. தெப்பத்தைச் சுற்றி குப்பையும் கொட்ட ஆரம்பித்தனர். சிறுநீர் கழித்தனர். தெப்பகுளமே குப்பை குளமாக மாறியுள்ளது. மழைக் காலத்தில் மழைநீருடன் சாக்கடை நீரும் தெப்பக்குளத்திற்குள் கலந்து வருவது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது பாரம்பரியமான இந்த கோயில் தெப்பக்குளத்தை மீட்கவும், முன்போல் குளத்தில் தண்ணீர் நிரப்பி தெப்ப உற்சவம் நடத்தவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி கோயில் நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்து வழக்கில், கடைகளைக் காலி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தெப்பக்குளத்தை மீட்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட்டில் பெருமாள் கோயில் தெப்பகுளத்தைச் சுற்றி உள்ள கடைகள் அகற்றப்பட்டன. தெப்பக்குளத்தை மீட்டு மாநகராட்சியுடன் இணைந்து பழமை மாறாமல் பராமரிக்கவும், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் போல் நிரந்தரமாக தண்ணீர் தேக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருவதை பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை