திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வருஷாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாள், ரங்க மன்னார் யாகசாலை பூஜையில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து எஜமான சங்கல்பம், புண்ணியாக வாசனம், மகா சாந்தி ஹோமம், திருவாதனம் சாத்துமுறை மற்றும் தீர்த்தகோஷ்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 7ம் தேதி 108 கலச திருமஞ்சனம் மற்றும் பிப்ரவரி 8 ம் தேதி சிறப்பு திருமஞ்சனம் மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
பிப் 06, 2024