/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வேட்டைக்காரன் கோயில் விழா கறி விருந்து | Temple Festival
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வேட்டைக்காரன் கோயில் விழா கறி விருந்து | Temple Festival
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில் ஆடுகள் நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இந்தாண்டு திருவிழாவையொட்டி திங்கள் இரவு 1 மணிக்கு பொங்கல் வைத்து பூஜைகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.
மார் 19, 2024