திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Kodaikanal
கொடைக்கானல் நாயுடுபுரம் இ.சி.சி. பகுதியில் அமைந்துள்ள கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழா கடந்த 5 ம் தேதி துவங்கியது. விழாவை மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பராமச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார். விழாவையொட்டி தினமும் சுவாமி குதிரை வாகனத்தில் உலா சென்று அருள்பாலித்தார். பக்தர்கள் அக்னி சட்டி, பறவை காவடி, மாவிளக்கு, எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்தனர்.
ஜூன் 11, 2024