உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை ஸ்ரீவால்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் 102 வது ஆண்டு உறியடி திருவிழா | Temple Festival | Madurai

மதுரை ஸ்ரீவால்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் 102 வது ஆண்டு உறியடி திருவிழா | Temple Festival | Madurai

மதுரை சௌராஷ்ட்ரா சபைக்கு பாத்தியப்பட்ட காமராஜர் சாலையில் உள்ள சீதா சமேத ஸ்ரீ கோதண்ட ராமசாமி தேவஸ்தானம் ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் 102 வது ஆண்டு உறியடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று இரவு காந்தி பொட்டல் பூந்தோட்டம் அருகே திருக்கண் மண்டபத்தில் கிருஷ்ண அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். உறியடிக்கும் கம்பிற்கு சிறப்பு பூஜைகள் செய்து உறியினை கார்த்திக் பட்டர் கம்புடன் நடனமாடிக் கொண்டு வந்தார். அவர் மீது பக்தர்கள் தண்ணீர் தெளித்தனர். அதைப் பொருட்படுத்தாமல் உறியினை சமயோஜனமாக அடித்து அனைவரது கைதட்டுகளை பெற்ற பின் உடைத்த தேங்காயுடன் சுவாமியிடம் வணங்கி எடுத்து சென்றனர். உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை