ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் அருள்பாலிக்கும் ஐம்பொன் சிலை வழங்கல்
ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் அருள்பாலிக்கும் ஐம்பொன் சிலை வழங்கல் / Temple Festival / Madurai மதுரை கடச்சனேந்தல் காதர்க்கிணறு பகுதியில் உள்ள ஜாங்கிட் நகர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வர செல்வ விநாயகர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தேய்பிறை பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சண்முகவேல் நகரை சேர்ந்த பக்தர் ராஜன் என்பவர் கோயிலுக்கு ரிஷப வாகனத்தில் நின்ற கோணத்தில் சிவனும் பார்வதியும் அருள் பாலிக்கும் ஐம்பொன் சிலையை நன்கொடையாக வழங்கினார். கோயிலில் பிரதோஷ நாளில் அதிகாலை 5 மணிக்கு மேல் ஸ்ரீ ருத்ர யாகம் நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் முதல் முறையாக அம்மையும் அப்பனும் சேர்ந்து மூன்று முறை கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேய்பிறை பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.