ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Kumbabhishekam | Manamadurai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தில் வெள்ளாரப்பன் (எ) முத்தையா அய்யனார் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. இன்று அதிகாலை புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து ராஜ கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர். பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தீபாராதனைகள் நடைபெற்றன. வெள்ளாரப்பன் என்ற அய்யனாருக்கும் கோயிலின் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலப்பிடாவூர், குலக்கட்டப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு மக்கள் செய்தனர்.