தேவகோட்டை நகரத்தாரின் 400 ஆண்டு பாரம்பரியம்
தேவகோட்டை நகரத்தாரின் 400 ஆண்டு பாரம்பரியம் | Devakottai | Thaipusam Kavadi pilgrimage continuing for 400 years சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரத்தார்கள் 400 ஆண்டு ஆண்டுகளாக பாரம்பரியமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவிற்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். முன்னதாக காவடிகள் வேலுடன் நகரின் முக்கிய வீதி வழியாக நகர்வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலை கோயிலில் இருந்து காவடிகள் புறப்பட்டு திருப்பத்தூர் ரோடு வழியாக பழநி தைப்பூச திருவிழாவிற்கு சென்றனர். தேவகோட்டையில் இருந்து செல்லும் வழியில் பொதுமக்கள் காவடிக்கு மாலை அணிவித்து வேலுக்கு பன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர். 48 நகரத்தார் காவடிகளும் ஒரு முதலியார் கட்டளை காவடியும் புறப்பட்டு சென்றது. தேவகோட்டை மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் அனைத்து காவடிகளும் ஒன்று சேர்ந்து காவடி ஆட்டம் நடைபெற்றது. பக்தர்கள் பரசவம் அடைந்தனர்.