தலையை பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள் | Madurai | Maternal Uncles Gold Ring Scheme
தலையை பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள் | Madurai | Maternal Uncles Gold Ring Scheme | Government Changes Decision மதுரை உசிலம்பட்டி அரசு ஹாஸ்பிடலில் தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தை வரும் 28ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக குழந்தைகளுக்கு வழங்க முதற்கட்டமாக 1106 தங்க மோதிரங்கள் உசிலம்பட்டி அரசு ஹாஸ்பிடல் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. முதல்வர் வருகையையொட்டி உசிலம்பட்டி ஹாஸ்பிடலை சீரமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்றது. இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மதுரை அரசு ராஜாஜி ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. முதல்வர் குழந்தைகளுக்கு மேடையில் மோதிரங்களை வழங்கிவிட்டு அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவ வார்டிலே நேரடியாகச் சென்று தங்க மோதிரங்களை வழங்க உள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கௌரவ் குமார், மருத்துவமனை டீன் அருள் சுந்தரேசன் உள்ளிட்டோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். முதல்வர் வருகைக்காக உசிலம்பட்டி அரசு ஹாஸ்பிடல் புனரமைப்பு பணிகள் இறதி கட்டத்தை எட்டும் நிலையில், இடமாற்றம் தொடர்பான திடீர் அறிவிப்பால் அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொண்டனர்.